ஆப்கான் மலைப் பகுதியில் சிதறிக் கிடக்கும் அமெரிக்க ஹெலிகாப்டர்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
அமெரிக்க ஹெலிகாப்டரின் பாகங்கள் ஆப்கானிஸ்தான் மலைப் பகுதியில் கிடக்கின்றன.
கடந்த சனிக்கிழமை ஹெலிகாப்டர் பாகிஸ்தானில் தரையில் விழுந்து விபத்துகுள்ளானதாக அமெரிக்காவும் தாங்கள் சுட்டுத் தான்இந்த ஹெலிகாப்டர் தரையில் விழுந்ததாக ஆப்கானிஸ்தானும் கூறுகின்றன.
இதில் 2 பேர் பலியானதாக பென்டகன் அறிவித்தது. 25 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர் என தலிபான் ராணுவம் கூறுகிறது.
இந் நிலையில் ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள் மலைப் பகுதியில் சிதறிக் கிடப்பதை தலிபான் ராணுவம் நிருபர்களுக்குக்காட்டியது.
இங்கு ஹெலிகாப்டரின் 4 சக்கரங்களும் சில உடைந்த பாகங்களும் கிடக்கின்றன. இது சுட்டு வீழ்த்தப்பட்ட 2வதுஹெலிகாப்டரின் பாகங்கள் தான் என தலிபான் கூறுகிறது.
ஆனால், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகாப்டர் எதுவும் விபத்துக்குள்ளாகவே இல்லை என அமெரிக்கா மீண்டும்மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications