நாங்க அப்படியே சாப்பிடுவோம்!
திருச்சி:
திருச்சியில் லாரியிலிருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள்கொள்ளையடிக்கப்பட்டன.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் திருச்சி மற்றம் தஞ்சாவூர் ஊர்களில் விற்பனைசெய்ய ரூ 10. லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்களை லாரி மூலம் அனுப்பிவைத்தது.
இந்த லாரியை திருச்செங்கோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி ஒட்டி வந்தார். சம்பவதினத்தன்று இரவு காவிரிக்கரை ஓரமாக உள்ள ஓயாமாரி சுடுகாட்டுக்கு அருகே லாரியைநிறுத்திவிட்டு தூங்கிவிட்டார் பழனிச்சாமி.
காலையில் உறக்கம் கலைந்து விழித்த அவர் லாரியின் தார்பாய்கள்பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். பரபரப்புடன் லாரியின் பின்பக்கம்சென்று பார்த்தார்.
லாரியிலிருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போயிருப்பதுதெரியவந்தது. இது குறித்து லாரி டிரைவர் பழனிச்சாமி திருச்சி கோட்டை குற்றப்பிரிவுகாவல் நிலையத்தில் புகார் செய்தார்.
பழனிச்சாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடிய பலே திருடர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications