3-வது இடம் பிடித்துள்ளோமே!: இளங்கோவன் திருப்தி
சென்னை:
தமிழக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின் போது நடைபெற்ற முறைகேட்டை விடவாக்கு எண்ணிக்கையின் போதுதான் அதிக அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகதமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறைகள் நடந்தன. பல முறைகேடுகளும் நடந்தன.வாக்கு எண்ணிக்கையின்போது அதைவிட அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன.சென்னை மத்திய பாலிடெக்னிக்கில் நடந்த சம்பவங்கள் அதற்கு எடுத்துக்காட்டு.
வாலாஜாவில் வாக்கு எண்ணிக்கையின் போது முறைகேடு நடந்துள்ளது அங்கு மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி திருப்திகரமாக உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது.அப்போது காங்கிரஸ் ஒரு இடம் கூட பெறவில்லை. ஆனால் தற்போது 5 கவுன்சிலர்தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் காங்கிரஸ் 2வது இடத்திலும்3வது இடத்திலும் வந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளில் காங்கிரசுக்கு 15 சதவிகிதம் வாக்குகள்கிடைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையில் 3வது கூட்டணி அமைந்த காரணத்தால் திமுக-அதிமுகவின் வெற்றி வாய்ப்புகள் குறைந்துள்ளன என்று கூறினார்.












Click it and Unblock the Notifications