ஆப்கானிஸ்தானில் 30 நிருபர்கள் சிறைபிடிப்பு
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானுக்குள் ரகசியமாய் நுழைந்த இந்தியப் பத்திரிக்கையாளர்கள் உள்பட 30 வெளிநாட்டுநிருபர்களை ஆப்கானிஸ்தான் ஆதிவாசிகள் சிறை பிடித்துள்ளனர்.
இதனால் பல நாட்டு செய்தியாளர்களும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும்ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்த வண்ணம் தான் செய்திகளை சேகரித்து வருகின்றனர்.
இதனால் நார்த்தர்ன் அலையன்ஸ் பகுதியில் உலகம் முழுவதிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான நிருபர்களும்வீடியோகிராபர்களும் குவிந்துள்ளனர்.
இவர்களில் சுமார் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, பல்கேரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 30 பேர் அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து நேரடியாக செய்தி சேகரிக்க தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளபகுதிக்குள் நுழைந்தனர்.
இவர்கள் உஸ்பெகிஸ்தானில் ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானில் நுழைந்து தலைநகர் காபூலுக்கு அருகேதரையிறங்கினர்.
ஆனால், இவர்கள் இறங்கிய உடனேயே அவர்களை உஸ்டானா கிராமத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள்சிறைபிடித்துவிட்டனர் என பாகிஸ்தானிய பத்திரிக்கை தெரிவிக்கிறது.
இவர்களை விடுவிக்க பணம் கேட்டு ஆதிவாசிகள் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஒரு நிருபர் மட்டும் தனது அலுவலகத்தை சேட்டிலைட் போன் மூலம் தொடர்புகொண்டு பேசினார். தாங்கள் மிக மோசமாக நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications