குடம் கொடுத்த குப்பன் வெற்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடம் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டு வேட்டையாடி கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
செங்கல்பட்டு நகராட்சித் தலைவர் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் குப்பன் என்பவர் போட்டியிட்டார்.தேர்தல் பிரசாரத்தின் முடிவில் அவர் வீடு வீடாக சென்று ஆட்கள் மூலம் வாக்காளர்களுக்கு குடங்களைவிநியோகித்தார்.
இதுகுறித்துத் தகவலறிந்த போலீஸார் விரைந்து வந்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர்விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் நகராட்சித் தலைவர் தேர்தலில் குப்பன் அமோக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 12,272 வாக்குகள்கிடைத்துள்ளன.
அவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்த பாஜக வேட்பாளர் கருணாமூர்த்திக்கு 8,415 வாக்குகளே கிடைத்துள்ளன.












Click it and Unblock the Notifications