போரில் இறந்தால் மோட்சம் கிடைக்கும்: ஒமர்
காபூல்:
தனது படைகளுக்கு இறைவனின் பரிபூரண ஆசிர்வாதம் இருப்பதாகவும், அமெரிக்கத் தாக்குதலில்இறந்தவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்றும் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகம்மத் ஒமர் கூறினார்.
அமெரிக்கத் தாக்குதலை தலிபான்கள் மிகச் சிறப்பாக எதிர் கொண்டு வருகின்றனர். படைகள் இடையேஒருங்கிணைப்பும் ஒற்றுமையும் சிறப்பாக உள்ளது. பாகிஸ்தானில் போராட்டம் நடத்தி உயிர் நீத்த வீரர்களைபாராட்டுகிறேன்.
இந்தப் போரில் ஒவ்வொரு முஸ்லீமும் ஈடுபட வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் போனாவாகஇருக்கலாம் அல்லது ராணுவ டாங்காக இருக்கலாம். ஆனால், இந்தப் புனிதப் போரில் உலகின் ஒவ்வொருமுஸ்லீமும் பங்கேற்க வேண்டும்.
புனிதப் போரில் உயிர் நீப்பது உன்னதமானது, மோட்சத்தை அடைய அது சிறந்த வழி. இறைவனின் துணையோடுஆப்கானிஸ்தான் வெல்லும்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
18 பேர் பலி:
இந் நிலையில் காபூல் அருகே திர்கித்கோட் நகரில் நேற்றிரவு அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 18 பேர்கொல்லப்பட்டதாகவும் 30 கடைகள் தரை மட்டமானதாகவும் தலிபான் கூறியுள்ளது.
இத் தாக்குதலில் 7 வீடுகளும் சேதமடைந்ததாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications