35 அடி உயரத்திலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய பெண்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே 35 அடி உயரமுள்ள ஒரு தூணிலிருந்து மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் கேபிள்கள் செல்வதற்காக அமைக்கப்பட்ட தூணின் மேல்,இன்று காலை திடீரென ஒரு பெண் நின்று கொண்டு கீழே குதித்து விடப் போவதாக மிரட்டிக் கொண்டிருந்தார். 35அடி உயரமுள்ள அந்தத் தூணிலிருந்து கீழே விழுந்தால் நிச்சயம் சாவுதான்.
அந்தப் பெண், தான் கீழே விழப் போவதாகத் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கவே, ரயில்வே போலீசார்உடனடியாக தீயணைப்புத் துறைக்கு போன் செய்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், படு சுறுசுறுப்புடன் செயல்பட்டனர். பல்வேறு விதமாக அந்தப் பெண்ணை"தாஜா" செய்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடிய பிறகு அந்தப் பெண்ணை மீட்டுக்கொண்டு கீழே கொண்டு வந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் அந்தப் பெண், பின்னர் ரயில்வே போலீசாரிடம்ஒப்படைக்கப்பட்டார்.
இதற்குள் இச்சம்பவத்தை வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் கூடியதால், அப்பகுதியில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications