சேலம் மேயர் பதவி: பா.ம.க. கனவை கலைத்த அதிமுக
சேலம்:
சேலம் மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அருளைவிட50,867வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். இதன்மூலம் சேலம் மேயர்பதவியை எப்படியாவது பிடித்துவிடத் துடித்த பா.ம.கவுக்கு பலத்த அரசியல் அடிவிழுந்துள்ளது.
இந்த மேயர் பதவிக்காக அவசர அவசரமாக கருணாநிதியைச் சந்தித்து திமுகவுடன்அவசரக் கூட்டணியும் வைத்துக் கொண்டார் ராமதாஸ். திமுகவின் வாக்கு வங்கிஉதவியுடன் மேயர் பதவியை பிடிக்க நினைத்தது பா.ம.க. ஆனால், அந்தக் கனவைஅதிமுக கலைத்துவிட்டது.
இது தேர்தலுக்குத் தேர்தல் அணி மாறி வரும் ராமதாசுக்கு விழுந்த பலத்த அடியாகக்கருதப்படுகிறது.
வாக்குகள் விவரம்:
சுரேஷ்குமார் (அதிமுக) - 1,45,783
அருள் (பாமக) - 94,916
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்:
அதிமுக- 27
திமுக- 18
த.மா.கா.-3
பா.ம.க.- 2
தமிழக ஜனநாயக பேரவை-1
சுயேட்சைகள்- 9
மேலும் வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் 34 பேரூராட்சிகளிலும் அதிமுகமுன்னணியில் உள்ளது.












Click it and Unblock the Notifications