ஸ்டாலின் வெற்றி பெறுகிறார்
சென்னை:
சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெறுகிறார்.
ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே ஸ்டாலினுக்கும், அதிமுக வேட்பாளர் பாலகங்காவுக்கும் இடையேஇழுபறியான நிலையில் வாக்குகள் வந்து கொண்டிருந்தன.
மாலை வரை ஸ்டாலின் முன்னிலையில் இருந்தார். ஆனால் மாலையில் நிலைமை பாலகங்காவுக்கு சாதகமாகமாறியது. அவர் ஸ்டாலினை விட 3000 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.ஆனால் இரவில் நிலைமை மீண்டும் மாறியது. ஸ்டாலின் வெகு வேகமாக முன்னிலைக்கு வந்தார்.
கடைசி நிலவரப்படி ஸ்டாலின் 3,35,620 வாக்குகளும், பாலகங்கா 3,00,557 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர்வசந்தகுமார் 57,000 வாக்குகளும் பெற்றிருந்தனர். மதிமுக வேட்பாளர் மனோகரன் நான்காவது இடத்தில்இருக்கிறார்.
35,000 வாக்குகளுக்கும் அதிகமாக ஸ்டாலின் முன்னிலையில் இருப்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.












Click it and Unblock the Notifications