ஸ்ரீவில்லிபுத்தூரில் தாமரைக்கனி மீண்டும் வெற்றி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூரர் நகராட்சி பதவியை தாமரைக்கனி தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவிலிருந்துவிலகி திமுகவில் இணைந்தார் தாமரைக்கனி.
இவர் ஸ்ரீவில்லிப்புத்தார் நகராட்சி தலைவராக இருந்து வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இவர்அதிமுக சார்பில் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டார் தாமரைக்கனி. இவர் தன்னை எதிர்த்துபோட்டியிட்ட அதிமுக வேட்பாளரான பாலசுப்ரமணியத்தை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில்தோற்கடித்தார்.
இதன் மூலம் அவர் தனது நகராட்சி தலைவர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications