திருச்சி மேயர் தேர்தல்: த.மா.கா. வெற்றி
திருச்சி:
திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சாருபாலா தொண்டமான் வெற்றிபெற்றுள்ளார். இவர் தனக்கு அடுத்தபடியாக வந்த திமுக வேட்பாளரைவிட 6,011 வாக்குகள் அதிகம் பெற்றுபெற்றுள்ளார்.
கடந்த முறை மேயராக இருந்த எமிலி ரிச்சர்ட் மூன்றாவது இடத்தைத் தான் பிடித்தார்.
மேயர் தேர்தலில் த.மா.கா. வெற்றி பெற்றிருந்தாலும் கூட அக் கட்சி கவுன்சிலர்கள் இரண்டு இடங்களில் மட்டுமேவெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாநகராட்சி அவை கூட்டம் நடக்கும்போது எதிர்க் கட்சிகள் பிரச்சனையைக் கிளப்பினால் வெறும் 2கவுன்சிலர்களை வைத்துக் கொண்டு அவர்களை மேயர் சமாளித்தாக வேண்டும்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:
சாருபாலா தொண்டமான் (த.மா.கா.) - 1,04,138
நிர்மலா (திமுக)- 98,127
எமிலி ரிச்சர்ட் (காங்கிரஸ்)- 35,802
கிரிஜா (மதிமுக)- 14,452
திருச்சியில் கவுன்சிலர் தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள்:
திமுக- 26
அதிமுக-18
பா.ஜ.க.-4
த.மா.கா.-2
காங்கிரஸ்-1
மதிமுக-1
சுயேச்சைகள்-8












Click it and Unblock the Notifications