அதிமுக கோட்டையை கலகலக்க வைத்த திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக கோட்டையாக இதுவரை விளங்கி வந்த விருதுநகர் மாவட்டம் இந்த ஊராட்சித் தேர்தலில் திமுக வசம்வந்துள்ளது.

இதுவரை நடந்த தேர்தல்களில் விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பாலான வாக்காளர்கள் அதிமுகவுக்குஆதரவாகவே வாக்களித்து வந்தனர்.

ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இது மாறி விட்டது. ஒரே ஒரு நகராட்சியைத் தவிர மற்ற அனைத்துநகராட்சிகளையும் அதிமுக கூட்டணி கோட்டை விட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளில் திமுகவும், விருதுநகரில் பாஜகவும் வெற்றிபெற்றுள்ளன. ராஜபாளையம் நகராட்சித் தலைவராக சுயேச்சை வேட்பாளர் சுப்பராஜா வெற்றி பெற்றுள்ளார்.

சிவகாசி நகராட்சித் தலைவராக தமாகா வேட்பாளர் ஞானசேகரன் வெற்றி பெற்றுள்ளார். இவர் மட்டுமே இந்தமாவட்டத்தில் வெற்றி பெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்.

எம்.பி. தேர்தலானாலும், எம்.எல்.ஏ. தேர்தல் ஆனாலும் அதிமுகவுக்கு வெற்றி உறுதியான மாவட்டமாக விருதுநகர்கருதப்பட்டு வந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்லில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாதது ஆச்சரியத்தைஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் முக்கியப் புள்ளிகளாக இருந்து வந்த தாமரைக்கனி, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் தற்போதுஅக்கட்சியில் இல்லாததும், அவர்கள் திமுகவில் முக்கியப் புள்ளிகளாக மாறியுள்ளதுமே அதிமுகவின்படுதோல்விக்குக் காரணமாக கூறப்படுகிறது.

மேலும், தாமரைக்கனியின் செல்வாக்கைக் கருத்தில் கொள்ளாமல், அவரது மகனை விட்டே அவரை எதிர்க்கச்செய்த அதிமுக தலைமையை ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை போலும். அந்த நகராட்சித்தலைவராக தாமரைக்கனி மீண்டும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இது தெரிய வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+