கோவை குண்டுவெடிப்பு: 167 பேர் மீது குற்றப்பத்திரிகை
கோயம்புத்தூர்:
1998ல் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட 167 பேர் மீது இன்று (செவ்வாய்க்கிழமை)கோயம்புத்தூர் தனி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 164 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனிநீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற 3 பேரும் கூட இன்றுதனி நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டனர்.
கொலை செய்தல், கொலை செய்ய முயற்சித்தல், வெடிகுண்டு வினியோகம் செய்தல் உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
58 பேர் கொல்லப்பட்ட இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மத்தியஉள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்தபோது, இந்தக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.
தடைசெய்யப்பட்ட அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த பாட்ஷா, அவருடைய மகன் சித்திக் அலி,முகம்மது அன்சாரி மற்றும் கேரள மக்கள் குடியரசுக் கட்சித் தலைவராக இருந்த அப்துல் நாசர் மதானி ஆகியோர்குற்றம் சாட்டப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான வெடிகுண்டுகளைத் தயாரித்து வழங்கிய ரியாஸ் உல் ரஹ்மான்ஏற்கனவே இந்த வழக்கில் அப்ரூவராக மாறிவிட்டார்.
குற்றப் பத்திரிகைகள் தாக்கல் முடிந்த பின்னர், இந்த வழக்கை 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி செல்வம்.












Click it and Unblock the Notifications