பின் லேடனிடம் சீனா வாங்கிய அமெரிக்க ஏவுகணை
பெய்ஜிங்:
1998ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின் லேடனின் முகாம்கள் மீது அமெரிக்க ஏவிய டாம்ஹாக்ஏவுகணைகளில் சில வெடிக்காமல் விழுந்தன.
அதே போல அமெரிக்காவை எதிர்த்துப் போராட தங்களுக்கு சீனா உதவி வருவதாக தலிபான் ராணுவத் தலைவர்கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு உலகம் அறிந்தது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆயுதங்கள்மட்டுமின்றி அணு ஆயுதம் தயாரிக்கவும் சீனா தான் உதவி வருகிறது. பாகிஸ்தான் மூலமாக தலிபான்களுக்கும்சீனா உதவிகள் வழங்கி வந்துள்ளது.
இதில் நிதி உதவி மட்டுமின்றி ஆயுத உதவிகளும் அடங்கும்.
இப்போதும் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலில் தங்களுக்கு சீனா உதவி வருவதாக தலிபான் ராணுவத்தின்தளபதியான ஜலாலுதீன் ஹக்கானி கூறியுள்ளார். சமீபத்தில் பாகிஸ்தான் வந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியஅவர் இதனைத் தெரிவித்தார்.
ஆனால், இதை எல்லாமே சீனா மறுக்கிறது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சுன் யூக்சி கூறுகையில்,இப்போதைக்கு தலிபான்களுடன் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
பின் லேடனிடமிருந்து அமெரிக்க ஏவுகணை எதையும் வாங்கவில்லை. இது சீனாவின் பெயரைக் கெடுக்கநடக்கும் முயற்சி என்றார்.
அமெரிக்க ஆயுதங்களை சீனா மறைமுகமாக வாங்குவதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல.அமெரிக்க அணு ஆயுத சோதனைச் சாலைகளில் இருந்து கருவிகளை சீன உளவாளிகள் கடத்தியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications