ஸ்டாலின் வென்றாலும் சிக்கல் தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் திமுக சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின் மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூடகவுன்சிலர்களின் எண்ணிக்கையில் திமுகவை அதிமுக முந்தியிருப்பதால், மீண்டும் ஸ்டாலின் சிக்கலில்மாட்டியுள்ளார்.

கடந்த முறை அவர் மேயராக இருந்த கடைசி காலத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. அதிகாரிகள் மூலம்ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி தந்தது.

இது மட்டுமின்றி திமுகவுடன் இருந்த த.மா.கா. பின்னாளில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. இதனால்அதிமுகவின் மாநகராட்சி அவைத் தலைவர் கராத்தே தியாகராஜனும், த.மா.க. தலைவர் வெற்றிவேலும் சேர்ந்துகொண்டு ஸ்டாலினை பலமுறை எரிச்சலூட்டி அவையையே ஸ்தம்பிக்க வைத்தனர்.

மாநிலத்தில் அதிமுக ஆட்சியில் உள்ள நிலையில் மாநகராட்சி மேயராக இருப்பதால் எந்தத் திட்டத்தையும்செயல்படுத்த விடமாட்டார்கள் என்பதால் இந்தத் தேர்தலில் நிற்கக் கூட ஸ்டாலின் முதலில் மறுத்துவிட்டார்.ஆனால், ஸ்டாலின் தவிர வேறு யாரை நிறுத்தினாலும் தோல்வி நிச்சயம் என்று திமுக தலைமைக்குதெரியவந்ததையடுத்து அவரையே மீண்டும் நிறுத்தினார் கருணாநிதி.

இப்போது ஸ்டாலின் வெற்றிபெற்றுவிட்டாலும் கூட மீண்டும் அதிமுக-த.மா.கா. கூட்டணி தான் மாநகராட்சியில்திமுகவைவிட அதிக இடங்களைப் பிடித்துள்ளது.

மொத்தமுள்ள 155 மாநகராட்சி கவுன்சிலர் தொகுதிகளில் 61 இடங்களைத் தான் திமுக கைப்பற்றியுள்ளது.கூட்டணிக் கட்சிகளான பாரதிய ஜனதா 3 இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி 1 இடத்திலும்வெற்றிபெற்றுள்ளன.

ஆனால், எதிரணியில் அதிமுக 67 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகளான த.மா.கா. 14 இடங்களிலும், இந்தியகம்யூனிஸ்ட் 1 இடத்திலும் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றுள்ளது.

நடுநிலை வகிக்கும் காங்கிரஸ் 2 இடங்களிலும், மதிமுக 1 இடத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும்,சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களின் ஆதரவை ஸ்டாலின் எதிர்பார்க்க முடியாது.

இந்நிலையில் துணை மேயர் பதவி அதிமுகவுக்குத்தான் என்பது உறுதியாகிவிட்டது.

இதனால் தினந்தோறும் அவையில் பெரும் மோதல்கள் நடக்கும் என்பது மட்டும் நிச்சயமாகிவிட்டது. தினமும் 2அணிகளும் மோதிக் கொண்டு நலத்திட்டங்கள் கவனிக்காமல் விட்டுவிடுவார்களோ என்ற அச்சம் இப்போதுநடுநிலையாளர்களிடையே பரவிவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+