சென்னை ஐ.ஐ.டி. இயக்குனரை கொல்ல முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியின் (ஐ.ஐ.டி.) இயக்குனர் பேரசாரியர் நடராஜனை கொல்லமுயற்சி நடந்தது.
நேற்றிரவு ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வெளியேவந்த அவரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் அவரது கழுத்தல் ஆழமான வெட்டு விழுந்தது.
முதுகிலும் அரிவாள் வெட்டுகள் விழுந்தன.
அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவர் இறந்துவிட்டதாகக் கருதி அக் கும்பல் அங்கிருந்துதப்பியோடிவிட்டது.
உடனடியாக அவர் ஐ.ஐ.டி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தேறி வருவதாக போலீசார்தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது தனிப்பட்ட விரோதம் காரணமாகநடத்தப்பட்ட தாக்குதலா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications