சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன்... ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேயர் தேர்தலில் என்னை மீண்டும்வெற்றி பெறச் செய்ததற்காக சென்னை மாநகர மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக சென்னை மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீண்ட இழுபறிக்குப் பின் ஒருவழியாக திங்கள்கிழமை 2 மணிக்கு மேல் ஸ்டாலின் வெற்றி பெற்ற செய்தியைதேர்தல் அதிகாரி ஆச்சார்யலு அறிவித்தார். இதையடுத்து அவரிடமிருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழைஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

பின்னர் வெளியே வரும்போது அவரை நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களிடம் ஸ்டாலின் பேசியதாவது:

வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு வன்முறையை அதிமுகவினர் கையாண்டதை மக்கள் அறிவார்கள். இந்தச்சூழ்நிலையிலும் நான் வெற்றி பெற்றுள்ளது திமுக மீதும், கலைஞர் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக்காட்டுகிறது.

இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு வாக்கு எண்ணும் மையங்களையே கைப்பற்றி அராஜகம் செய்தார்கள்அதிமுகவினர். இதுகுறித்து ஆளுநர், தேர்தல் கமிஷன், மத்திய அரசு ஆகியவற்றிடம் புகார் செய்துள்ளோம்.

எனது ஐந்து ஆண்டு கால மேயர் பதவியின்போது நான் பணியாற்றிய விதத்தை அங்கீகரித்தே சென்னை மக்கள்மீண்டும் என்னை தேர்வு செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். எனவே அவர்களது நம்பிக்கையை தகர்க்கும்விதத்தில் செயல்படாமல் சேவை மனப்பான்மையுடன் செயல்படுவேன் என்றார் ஸ்டாலின்.

தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் மேயர் பதவியை வகிக்கப் போகும் முதல் மேயர் மு.க. ஸ்டாலின் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+