ஜெ.யிடம் ஆசி பெற சென்னை விரைந்த கோவை மேயர்
கோயம்புத்தூர்:
கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மலரவன் அதிமு பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் ஆசி பெற திங்கள்கிழமை சென்னை சென்றார்.
கோவை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில், அதை கூட்டணிகட்சிகளுக்குவிட்டுத்தர அதிமுக மறுத்தது. முன்னதாக கடந்த மேயர் தேர்தலில் அங்கு தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டுவென்றது.
தற்போது அதிமுக சார்பில் மலரவன் போட்டியிட்டு தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதிய ஜனதா வேட்பாளரைவிட 7,438 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
இதையடுத்து அவரும், அதிமுக அமைச்சர்கள் சண்முகவேலு, வேலுச்சாமி மற்றும் தொண்டர்களுடன் வந்து கோவைமாநகராட்சி ஆணையாளரிடம் வெற்றிபெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்கள்.
பிறகு 3 பேரும் நேற்று (திங்கள்கிழமை) மாலை சென்னை புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு சென்று ஜெயலலிதாவிடம் ஆசிபெற்றுவிட்டு, மீண்டும் நாளை (புதன்கிழமை) கோவை திரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications