சென்னை மேயர் பதவியை ஸ்டாலின் தக்கவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் பதவியை மு.க. ஸ்டாலின் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆனால் அவரது வெற்றி வாக்குவித்தியாசம் வெகுவாக குறைந்து விட்டது.

கடுமையான இழுபறிக்குப் பின்னர் சென்னை மேயருக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின்5,013 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரான நா. பாலகங்காவைத் தோற்கடித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது சென்னை மேயர் தேர்தல்முடிவுதான். கடந்த இரண்டு நாட்களாக சென்னை மேயர் மற்றும் வார்டு தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுவந்தன.

துவக்கத்தில் இருந்தே ஸ்டாலின் முன்னணியில் இருந்தார். ஆனால் திடீரென அதிமுக வேட்பாளர் பாலகங்காமுன்னணிக்கு வந்தார். அதன் பிறகு இருவரும் மாறி மாறி முன்னணிக்கு வந்தனர். இந்தச் சூழ்நிலையில் ஸ்டாலின்40,000 ஓட்டுக்களுக்கும் மேலாக கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தார்.

திங்கள்கிழமை மாலை ஸ்டாலின் வெற்றி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாலையில், ஸ்டாலின் 10,000க்கும் சற்றே அதிகமான ஓட்டுக்களே கூடுதலாகபெற்று முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பிற்பகலுக்கு மேல் சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களில் அதிமுகவினர் திடீர் அடக்குறையில்ஈடுபட்டதாக திமுகவினர் புகார் கூறியதற்குப்பிறகு இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில் இரவு 10 மணிக்குள் 154 வார்டுகளின் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. மேயர்தேர்தலுக்கான முடிவுகள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவுக்கு மேல் அமைச்சர் ஜெயக்குமார், வேட்பாளர் பாலகங்கா மற்றும் சில அதிமுகவினர்தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலுவைச் சந்திக்க வந்தனர். இவர்கள் தனி அறைக்குச்சென்று நீண்ட நேரம் ஆலோசித்தனர்.

அதன் பின்னர் 1 மணியளவில் வெளியே வந்த ஆச்சார்யலுவிடம் யார் வெற்றி பெற்றது என்று நிருபர்கள்கேட்டபோது, அவர் பதில் ஏதும் சொல்லாமல் கம்ப்யூட்டர் அறைக்குச் சென்று விட்டார். பிறகு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கு மேல் வெளியே வந்த அவர் ஸ்டாலின் வெற்றிச் செய்தியைஅதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இறுதி முடிவு:

பதிவான வாக்குகள் - 13,25,742

செல்லாதவை - 42,314

மு.க. ஸ்டாலின் (திமுக) - 5,68,451

நா. பாலகங்கா (அதிமுக) - 5,63,438

வசந்த குமார் (காங்கிரஸ்) - 1,02,696

மனோகரன் (மதிமுக) - 24,491

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+