விரைவில் முதல்வரை சந்திப்பேன்: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைச்சந்திக்கவுள்ளதாக சென்னை நகர மேயர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் ஸ்டாலின் பேசுகையில்,
இந்த உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக விரோத தேர்தல். அதிமுகவினரின் அளவு கடந்த அராஜகத்திற்கு மத்தியில்முடிந்துள்ள தேர்தல்.
தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆளுநர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு திமுக சார்பில் புகார்மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
சட்டரீதியாக இந்த தேர்தல் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் யோசிக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதல்வர் பன்னீர்செல்வத்தைச்சந்தித்து விவாதிப்பேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications