தாராபுரம் நகராட்சித் தலைவரான கல்லூரி மாணவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும் மாணவி சாந்தி, தாராபுரம் நகராட்சித் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
சாந்திக்கு வயது 22 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள நகராட்சித்தலைவர்களிலேயே குறைந்த வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.காம் படித்து வரும் சாந்தி தாராபுரம் நகராட்சித் தலைவராக பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டுவெற்றி பெற்றுள்ளார். இவருக்கு தாய், தந்தை, மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.
தங்களது கல்லூரியைச் சேர்ந்த மாணவி நகராட்சித் தலைவியாக தேர்வு செய்யப்பட்டதை அறிந்த லயோலாகல்லூரி மாணவ, மாணவியர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.












Click it and Unblock the Notifications