தலிபான் எதிர்ப்புப் படைக்கு அமெரிக்க விமானங்கள் உதவி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கு உதவும் வகையில் விமானத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பில்ட்கூறியுள்ளார்.

முதலில் பாகிஸ்தானின் நெருக்குதல் காரணமாக இந்தப் படையினரை ஒதுக்கித் தள்ள முயன்றது அமெரிக்கா.ஆனால், தொடர்ந்து 3 வாரம் நூற்றுக்கணக்கான விமானங்களையும், ஆயிரக்கணக்கான ஏவுகணைகளையும்கொண்டு தாக்குதல் நடத்தியும் தலிபான்களுக்கு பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்த அமெரிக்காவால்முடியவில்லை.

இதனால், தரையில் தனது படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த அமெரிக்கா அத் திட்டத்தைநிறுத்தி வைத்துவிட்டது. சிறப்பு அதிரடிப் படையினர் 200 பேர் மட்டுமே ஹெலிகாப்டர்களில் இறங்கி ஆங்காங்கேதாக்கிவிட்டு உடனடியாக அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு திரும்பி விடுகின்றனர்.

இது போன்ற தாக்குதல்கள் தலிபான்களை ஒழித்துக் கட்ட முடியாது என்பதால், பாகிஸ்தானின் யோசனையைபுறக்கணித்துவிட்டு இப்போதைக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருடன் கைகோர்க்க அமெரிக்கா முடிவுசெய்துள்ளது.

இந் நிலையில் ரம்ஜான் மாதமும் பனிகாலமும் நெருங்கி வருகிறது. குளிர்காலத்தில் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளில் பனி நிறைந்துவிடும் என்பதால் தாக்குதல் சிரமமாகிவிடும். ரம்ஜான் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தீவிரதாக்குதல் நடத்தினால் அது இஸ்லாமிய நாடுகளின் கடும் கண்டனத்துக்குள்ளாகும்.

இது போன்ற தாக்குதல்கள் தலிபான்களை ஒழித்துக் கட்ட முடியாது என்பதாலும், ரம்ஜான் மாதம், பனிக் காலம்போன்ற பிரச்சனைகள் இருப்பதாலும் பாகிஸ்தானின் யோசனையை புறக்கணித்துவிட்டு இப்போதைக்கு நார்த்தர்ன்அலையன்ஸ் படையினருடன் கைகோர்க்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதற்காக அவர்களுக்கு உதவும் வகையில் தனது விமானத் தாக்குதலை மாற்றியமைத்துள்ளது. விண்ணிலிருந்துமட்டுமின்றி தரையிலிருந்தும் தலிபான்களுக்கு நெருக்குதல் தரத் திட்டமிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் வட பகுதியில் நிலை கொண்டுள்ள நார்த்தர்ன் அலையன்ஸ் படைகளை எதிர்கொள்ள பெரும்அளவிலான தலிபான் படைகள் காபூலுக்கு வடக்கே நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் படைகளை முதலில் அமெரிக்காதாக்கவேயில்லை. இது நார்த்தர்ன அலையன்ஸ் படையினருக்கு ஏமாற்றம் தந்தது.

இப்போது புதிய திட்டப்படி தலிபான்களின் முன்னணி நிலைகள் (பிரண்ட் லைன்) மீது அமெரிக்க விமானங்கள்தாக்குதல் நடத்த ஆரம்பித்துவிட்டன. நேற்று (திங்கள்கிழமை) முதல் இத் தாக்குதல் தொடங்கியது.

தலைநகர் காபூலுக்கு வடக்கே ஷோமலி மலைப் பகுதியில் நிற்கும் தலிபான்களின் டாங்கிகளை அமெரிக்கவிமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) குண்டு வீசி அழித்தன. சில குண்டுகள் தவறிப் போய்நார்த்தர்ன்அலையன்ஸ் பகுதியிலும் விழுந்தன.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பில்ட் கூறுகையில்,

நார்த்தர்ன அலையன்ஸ் படையினர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய அமெரிக்கவிமானங்கள் உதவி வருகின்ற. அவர்கள் ஆப்கானிஸ்தானின் எந்தப் பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில்எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+