இந்தோனேசியா அருகே படகு மூழ்கி 350 பேர் பலி
ஜெனீவா:
இந்தோனேசியா அருகே உள்ள ஜாவா தீவுக்கருகே படகு கடலில் மூழ்கியதில் 350 பேர் கொல்லப்பட்டனர்.இவர்களில் பெரும்பாலானோர் இராக்கைச் சேர்ந்தவர்கள்.
இந்தோனேசியா அருகே உள்ள ஜாவாக் கடலுக்குள் உள்ளது ஜாவா தீவு. இங்கு இராக், இரான், அல்ஜீரியா, பாலஸ்தீனம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து குடியேறிய மக்கள்வசித்து வருகிறார்கள்.
இவர்களில் 421 பேர் கடந்த வியாழக்கிழமை ஒரு பெரிய படகில் ஏறி ஜாவா கடலில் உள்ள வேறு ஒரு தீவுக்குசசெல்லவதற்கு கிளம்பினார்கள். படகு சிறிது தூரம் சென்றவுடன் அதிலிருந்த 21 பேரை அருகிலுள்ள ஒரு தீவில்படகின் கேப்டன் இறங்கச் சொல்லிவிட்டார்.
பிறகு 400 பேருடன் படகு சென்று கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை நடுக்கடலில் அந்தப் படகுசென்றுகொண்டிருக்கும் போது, படகின் எஞ்ஜினில் கோளாறு ஏற்பட்டு எஞ்ஜின் நின்றுவிட்டது. மேலும் படகுக்குள்கடல் நீர் புகுந்துகொண்டிருக்கிறது என்றும் படகின் கேப்டன் கூறினார்.
இதையடுத்து படகிலிருந்த பயணிகள் பீதியடைந்தனர். பிறகு பத்தே நிமிடத்தில் படகு கடலுக்குள் மூழ்கத்தொடங்கியது.
படகில் பயணம் செய்த 400 பேரில் 44 பேர் மட்டுஅம உயிர் தப்பி ஜாவா தீவிலுள்ள போகார் நகரத்துக்குவந்தார்கள். அவர்களில் 8 வயது சிறுவனும் அடங்குவான். அவனுடன் படகில் பயணம் செய்த அவனது 21உறவிணர்களும் கடலில் மூழ்கி விட்டனர்.
இந்தச் சோகச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications