தென் மாவட்டங்களில் சரிந்தது அதிமுகவின் செல்வாக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தென் மாவட்டங்களில் செல்வாக்குடன் விளங்கி வந்தஅதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதக் காட்டுகிறது.

கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை, உள்ளிட்ட அனைத்து தென் மாவட்டங்களிலும்அதிமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியது.

ஆனால், நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனது கோட்டையான மதுரையையே அதிமுக இழந்துள்ளது.

மதுரை மாநகராட்சியைக் கைப்பற்ற அதிமுகவால் முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட்கட்சிகளின் உதவியுடன் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது.

தற்போது மதுரையில் உள்ள 226 வார்டுகளில் 104 இடங்களில் அதிமுக வெற்றிபெற்றிருந்தாலும் கடுமையாகப்போராடித்தான் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என்று பெயர் வெளியிட விரும்பாத அதிமுக தலைவர் ஒருவர்கூறினார்.

கைவிட்ட ராமநாதபுரம்:

இதேபோல அதிமுகவின் கோட்டை என் கருதப்பட்ட ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ளஅனைத்து நகராட்சிகளையும் அதிமுக இந்த முறை இழந்துள்ளது. தேவர் சமுதாயத்தினர் நிறைந்த இம்மாவட்டங்கள் எப்போதுமே அதிமுகவின் கோட்டையாக விளங்கின. ஆனால், இம்முறை அதை அதிமுகஇழந்துவிட்டது.

விருதுநகரில் பெரும் தோல்வி:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ஒன்றில் மட்டும் த.மா.கா.வெற்றிபெற்றுள்ளது. இம் மாவட்டத்தில் அதிமுகவுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொகுதியான பெரியகுளத்திலேயே அதிமுக வெற்றிபெற முடியவில்லை. இதுதென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவு என்று அதிமுகவினரே கூறுகிறார்கள்.

80 சதவீத சரிவு:

மேலும் அதிமுக வெற்றிபெற்ற பல நகராட்சி உறுப்பினர் தொகுதிகளில் வெறும் 20 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தான்வெற்றிபெற்றுள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவின்செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் கூறுகையில், கடந்த 1996ம் ஆண்டு திமுக மாபெரும்வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் மாபெரும் வெற்றிபெற்றது.

வெற்றி விழா கொண்டாட தகுதி இல்லை:

இதேபோல இந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றியைப் பெற்றாலும், உள்ளாட்சித் தேர்தலில் பெரும்வெற்றிபெற்றதாகக் கூறமுடியாது. எனவே அதிமுக வெற்றிவிழாக் கொண்டாடும் தகுதியை இழந்துள்ளது என்றார்.மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சொக்கலிங்கம் கூறுகையில், எங்களிடம் ஆட்சி அதிகாரமும் பணபலமும் இல்லாதிருப்பினும் பல இடங்களில்3-வது இடத்தைப் பிடித்துள்ளோம். இதுகுறித்து நாங்கள் பெருமையடைகிறோம் என்றார்.

தென் மாவட்ட முடிவுகளைப் பொருத்தவரை மதிமுக 4-வது இடத்தில்தான் வந்துள்ளது. கோவில்பட்டி நகராட்சியில் ஓரளவு வார்டுகளைக்கைப்பற்றியுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிமுகவும், திமுகவும் தான் முக்கியப் பங்கை வகிக்கின்றன. ஆனால் அவற்றின் வெற்றி அவை சேர்க்கும் கூட்டணிக்கட்சிகளைப்பொருத்தே அமைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+