ஸ்டாலின் உ.ண்ணாவிரதம் திடீர் வாபஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் போது அதிமுகவினர் முறைகேடு செய்ததைஎதிர்த்து உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இருந்த முடிவை ஸ்டாலின் வாபஸ் பெற்றார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவியைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற எண்ணத்தில்ஆளுங்கட்சி குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

வாக்குச் சாவடிகளில் புகுந்து கராத்தே தியாகராஜன், அமைச்சர் வளர்மதி, சேகர் பாபு ஆகியோரும் கள்ள ஓட்டுப்போட்டனர். இதை டிவிக்களும், பத்திரிக்கைகளும் மக்களுககுப் படம் பிடித்துக் காட்டின.

வாக்கு எண்ணும் மையங்களையும் அதிமுகவினர் கைப்பற்றி, அதிமுக தான் முன்னணியில் உள்ளது என்று அவர்கள்டிவியில் மட்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள். மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியே, ஆளுங்கட்சிதான்முன்னணி என்று தவறான தகவல்களை நிருபர்களுக்குத் தந்திருக்கிறார்.

இந்த முறைகேடுகளை எதிர்த்து நானும், திமுகவினரும் கவர்னர் மாளிகை முன்பாக செவ்வாய்க்கிழமைஉண்ணாவிரம் இருப்போம். இவ்வாறு ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

ஆனால் கவர்னர் மாளிகை முன்பு யாரும் போராட்டடம் நடத்த முடியாது எனவே அதற்கு அனுமதி தரமுடியாதுஎன்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர் முத்துக் கருப்பன் கூறினார்.

மேலும் அந்தப் பகுதியில் யாராவது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், அவர்கள் கைது செய்யப்படுவாக்ள் என்றும்அவர் கூறினார்.

இதையடுத்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஸ்டாலின் செவ்வாய்க்கிழமைமேற்கொள்வதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது. அதற்குப் பதிலாக இளைஞர் அணிசார்பில் வேறொரு நாளில் மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

எனவே இன்று ஸ்டாலின் தலைமையில் நடப்பதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+