தேர்தல் முடிந்தும் கலவரம் தொடர்கிறது: முதுகுளத்தூர் அருகே 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Subscribe to Oneindia Tamil

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகே இருகோஷ்டியினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நகராட்சித் தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. அப்போதுமுதுகுளத்தூர் அதிமுக எம்.எல்.ஏ பதினெட்டாம்படியானின் தம்பி ஆறுமுகம், தனது ஆதரவாளர்களுடன் ஒருவாக்குச் சாவடிக்கு வந்து கள்ள ஓட்டுப்போட முயன்றார். அதற்கு அங்கு வாக்களிக்க வரிசையில் நின்றபொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தனது கைத்துப்பாக்கியை எடுத்து பொதுமக்கள் மீது சுட்டதில் 6 பேருக்குகுண்டுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் தற்போது மதுரை அர சு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதையடுத்து இன்று காலை ஆறுமுகம் கோஷ்டியினருக்கும், எதிர் கோஷ்டியினருக்கும் இடையே மீண்டும் மோதல்ஏற்பட்டது.

இந்த மோதலின் போது செல்வநாயகபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மகன் ஆகிய 2பேரும் அரிவாளால் வெட்டப்பட்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் 2 பேரும் தற்போது இராமநாதபுரம் அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தமோதல் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை டி.ஐ.ஜி. சஞ்சய் மோகன்சம்பவ இடத்திற்கு விரைந்து 2 கோஷ்டியினருக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்பகுதிமுழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+