தரைவழித் தாக்குதலுக்கு 1000 வீரர்களை அனுப்புகிறது இங்கிலாந்து

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடன் இணைந்து தரைவழித் தாக்குதல் நடத்த வசதியாக 1,000 பேர் கொண்டபடையை இங்கிலாந்து அனுப்ப உள்ளது.

இவர்களில் 600 கடற்படை கமாண்டோக்களும், சிறப்புப் படையினரும் அடங்குவர். இவர்கள் ஓமனில் இப்போதுபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போர்ப் பயிற்சியில் 4 பிரிட்டிஷ் போர்க் கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. இவ் வார இறுதியில் பயிற்சிமுடிந்தவுடன் இந்தப் படையினர் இங்கிலாந்து திரும்ப மாட்டார்கள். ஓமனிலேயே தங்கி இருப்பார்கள்.

தரையில் தாக்குதல் தொடங்கும்போது அமெரிக்கப் படையினருடன் இவர்கள் இணைந்து கொள்வார்கள் எனஇங்கிலாந்து உளவுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இங்கிலாந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெப் ஹூன் கூறுகையில், இங்கிலாந்துப் படைகள் தயார் நிலையில்உள்ளன என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+