கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்களைப் பெற பாக்.மறுப்பு
இஸ்லாமாபாத்:
ஆப்கானில் அமெரிக்க விமானங்களின் குண்டுவீச்சுத் தாக்குதலுக்குப் பலியான 35 தீவிரவாதிகளின் சடலத்தைப்பெற பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தத் தீவிரவாதிகள் புனிதப் போருக்காகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருந்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த தீவிரவாதிகள் இருந்த வீட்டை அமெரிக்க விமானங்கள் குறிபார்த்துத்தாக்கியதில் 35 ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் பாகிஸ்தான் ஆதரவுடன் காஷ்மீரில் தீவிரவாதத்தில் ஈடுபட்டு அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றுவந்தவர்கள். அமெரிக்கத் தாக்குதலையடுத்து தலிபானுக்கு உதவ ஆப்கானிஸ்தானுக்குச் சென்றனர்.
கொல்லப்பட்ட இந்தத் தீவிரவாதிகளில் 8 பேரின் உடல்களை தலிபான்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால், சடலங்களை தோர்காம் என்ற இடத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் எடுத்துவர பாகிஸ்தானிய் எல்லைப்பாதுகாப்புப் படைவீரர்கள் அனுமதிக்கவில்லை. அந்த உடல்களை வாங்கவேண்டாம் என்று உயர் அதிகாரிகள்கூறிவிட்டதாக அந்த வீரர்கள் கூறுகிறார்கள்.
தீவிரவாதிகள் உருவாக்கப்படும் இடமே பாகிஸ்தான் தான் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும் என்பதால் தனதுநாட்டைச் சேர்ந்த அவர்களின் உடல்களை வாங்க அந் நாடு மறுத்துவிட்டது.
இந்நிலையில் கராச்சியில் அந்த 35 வீரர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவர்களது நினைவாகமாதிரி இறுதி ஊர்வலம் நடத்த முஸ்லீம் மதவாதிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனைகள்ஏற்படக் கூடும் என்பதால் அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications