உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது என்கிறார் பன்னீர்
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மிக சிறப்பான முறையில் அமைதியாக நடந்து முடிந்தது என்று தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களாகிய மருதுபாண்டியர் சகோதரர்களின் 200வது நினைவு நாள் இன்று (புதன்கிழமை)சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மதுரை கிளம்பியபன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது:
காவல் துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை எதுவும்இல்லாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. தமிழக மக்கள் மதச்சார்பற்ற கூட்டணி மீது தங்களுக்குள்ளநம்பிக்கையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
அதிமுக பெரும்பாலான நகராட்சித் தலைவர் பதவிகளையும் வென்றுள்ளது. இதன் மூலம் அதிமுகவுக்கு கிராமத்தில்மட்டுமல்ல நகரத்திலும் ஆதரவு உள்ளது என்பது தெளிவாகிறது.
தேர்தலின் போது முறைகேடு நடந்தது, வாக்கு எண்ணிக்கையின் ாபது முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டிமறு தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறி வருகிறார். தேர்தலில்தோல்வியுற்றவர்கள், தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் இது போல் கூறுவது வழக்கமான ஒன்றுதான்.
கொப்பரை தேங்காய் ஊழல் விவகாரத்தில் அரசு தேவையான நடவடிக்ககைகளை எடுக்கும் என்றார்பன்னீர்செல்வம்.
உங்கள் சொந்த ஊரான பெரியகுளத்திலேயே அதிமுக தோல்வியுற்றுவிட்டதே என்று நிருபர்கள் முதல்வரிடம்கேள்வி எழுப்பியபோது, ஊர்காவல் தலைவன் ஊர் காவலுக்கு செல்லும் போது அவன் வீடுகொள்ளையடிக்கப்படுவது போலத்தான் நடந்திருக்கிறது என்று பதிலளித்தார் பன்னீர்செல்வம்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications