வன்முறையில் ஈடுபட்ட அதிமுக மீது வழக்கு: கருணாநிதி அறிவிப்பு
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியது, கள்ள ஓட்டுப் போட்டது குறித்துநடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குத் தொடர்வோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று (புதன்கிழமை) சென்னையில் நிருபர்களுக்குப் பேட்டியளிக்கும் போது கூறியதாவது,
சென்னையில் மேயர் பதவித் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, தேர்தல்முடிவை மாற்றி அறிவிக்கும்படி அதிமுகவினர் அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இருப்பினும் சுதாரிப்பான திமுகதொண்டர்கள் இதைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
மேலும் சென்னையில் உள்ள ஒரு வார்டில் மொத்த வாக்காளர்கள் 40,000 பேர் தான். ஆனால் அங்கு 62,115 பேர்மேயர் பதவிக்கு வாக்களித்ததாக அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னையில் பதிவான செல்லாத ஓட்டுக்கள் மொத்தம்13,000 மட்டும் தான். ஆனால் தற்போது அது 42,000 ஆகியுள்ளது.
இதுகுறித்து அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இதுபோன்ற வன்முறைகளைஎதிர்த்து திமுக வழக்குத் தொடரும்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications