இளங்கோவனை நீக்க காங். அதிருப்தி கோஷ்டி தீவிரம்
சென்னை:
காங்கிரஸ் கொள்கைகளைக் காக்கவும், அவற்றை நிலை நாட்டவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்துஇளங்கோவனை நீக்க வேண்டும் என்ற அதிருப்தி கோஷ்டியினர் கோரியுள்ளனர்.
இதுகுறித்து நேற்று சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் சக்திவேல், கவுரி சங்கர்,ராஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம் இளங்கோவன்தன்னிச்சையாகச் செயல்பட்டதுதான்.மேலும் ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டதும் ஒரு பெரியதவறாகும்.
உள்ளாட்சித் தேர்தலில் 60 சதவீத இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள்நிறுத்தப்படவில்லை.
எல்லாக் கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட்ட புதிய நீதிக்கட்சி, மக்கள் தமிழ் தேசம், புதிய தமிழகம் போன்றகட்சிகளை காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்ததால் இந்தக் கட்சிகள் தான் லாபமடைந்துள்ளன.
திமுகவினரோடு சேர்ந்துகொண்டு போலீஸ் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறிவருகிறார்.உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் ஊதுகுழலாகவும் இவர் செயல்பட்டார்.
தமிழக காங்கிரஸ் கொள்கைகளைக் காக்கவும், நிலை நாட்டவும் இளங்கோவனை தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர்பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications