கணவரை விட்டு காதலனை கைபிடித்த பெண்
ஆலந்தூர்:
சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்து காணாமல் போன பெண்ணை சேலத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால்அவர் கணவருடன் வாழ விருப்பமில்லை, காதலருடன்தான் வாழ விரும்புகிறேன் என்று நீதிமன்றத்தில் கூறியதால்காதலருடனேயே அனுப்பி வைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வசித்த வருபவர் வீரப்பன் (வயது 48). இவரது மனைவி இந்திரா (38).குடும்பம் கஷ்டப்பட்டு வந்ததால் சம்பாதிப்பதற்காக சிங்கப்பூர் சென்றார் இந்திரா.
அங்குள்ள வேலை முடிந்துவிட்டதால் தான் சென்னை திரும்புவதாக கடந்த ஜுலை மாதம் தன் கணவருக்கு கடிதம்எழுதியிருந்தார் இந்திரா.
தன் மனைவியை அழைத்துச் செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஆவலோடு காத்திருந்தார்வீரப்பன். சிங்கப்பூர் விமானம் வந்தது. ஆனால் அவர் மனைவிதான் வரவில்லை.
இதனால் கவலையடைந்த வீரப்பன் குறிப்பிட்ட தேதியில் தன் மனைவி வராத காரணத்தால் சிங்கப்பூருக்குதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்த போது இந்திரா சென்னை திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து வீரப்பன் போலீசில் புகார் செய்தார். தன் மனைவி ரூ.1 லட்சம் பணத்துடனும், 40 சவரன் தங்கநகையுடன் சிங்கப்பூரிலிருந்து வந்ததாகவும், அவரை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் காணவில்லைஎன்றும் மீனம்பாக்கம் விமான நிலைய போலீசாரிடம் புகார் செய்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இதற்கிடையே இந்திரா சேலத்தில் வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து,போலீசார் சேலம் சென்று இந்திராவையும், அவருடன் வசித்து வந்தவரையும் கைது செய்து சென்னை கொண்டுவந்தனர்.
போலீசார் இந்திராவிடம் விசாரணை செய்த போது தன் கணவருடன் தான் வாழ விரும்பவில்லை என்றும், தான்காதலித்தவருடன் விருப்பப்பட்டே வசித்து வருவதாகவும் கூறினார்.
இதைத் தொடர்ந்து இந்திராவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தன் கணவருடன் தான் வாழவிரும்பவில்லை. தன் காதலனுடன் தன்னை வாழ அனுமதிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டு ஜலநாதனிடம்கேட்டுக் கொண்டார் இந்திரா.
இதையடுத்து இந்திராவை அவர் விரும்பிய படி அவரது காதலனுடன் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்மாஜிஸ்திரேட்டு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications