புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி 7 ராணுவத்தினர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி 7இலங்கை ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

வடமறாச்சி பகுதியில் உள்ள நெல்லியாடி கிராமம் அருகே, ராணுவத்தினர் ஒரு வாகனத்தில் இன்று (புதன்கிழமை)காலை 11 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, புலிகளால் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தகண்ணிவெடி வெடித்ததில் அந்த வாகனமும் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது.

இச்சம்பவத்தில் லெப்டினன்ட் கர்னல் விஜெக்கூன் உள்பட 7 ராணுவத்தினர் சம்பவ இடத்திலேயேகொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.

இரு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கை கடற்படையினர் 22 விடுதலைப்புலிகளைக் கொன்று அவர்களின் 3படகுகளையும் மூழ்கடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+