டிவி நடிகையை கொன்ற பெண் ஆந்திராவில் கைது
சென்னை:
கடந்த மாதம் 20ம் தேதி கொலை செய்யப்பட்ட டிவி நடிகை அனந்தலட்சுமி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தநாகு என்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் லேக்வியூ ரோட்டில் வசித்து வந்தவர் அனந்தலட்சுமி (50). இவர் டிவி நடிகை. இவரதுமகள் ஜோதி தன் கணவர் தேவானந்துடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதியன்று அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்டார். அவர் வாயில் துணிஅடைக்கப்பட்டு, அவரது கண்களில் மிளகாய்பொடி தூவப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டிருந்தார்.
இந்தக் கொலை குறித்து விசாரிக்க போலீஸ் இணை கமிஷனர் சைலேந்திரபாபு தலைமையில் தனி போலீஸ் படைஅமைக்கப்பட்டது.
விசாரணையின் போது, அனந்தலட்சுமி ஆந்திராவிலிருந்து பெண்களை வரவழைத்து விபசாரம் நடத்தி வந்ததுதெரிய வந்தது. மேலும் அவருக்கு பெண்களை சப்ளை செய்து வந்தவர் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் வசித்துவரும் பெண் புரோக்கர் லட்சுமி என்ற தகவலும் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் லட்சுமியை தேடிவந்தனர். இந்நிலையில் போலீசாரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட லட்சுமி, அனந்த லட்சுமி கொலைக்கும், தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும். கொலைநடந்த தினத்தன்று அனந்த லட்சுமி வீட்டிற்கு நாகு (21), சாந்தி (23) என்ற 2 பெண்களை அனுப்பி வைத்ததாகவும்கூறினார்.
இதைத் தொடர்ந்து போலீசார் சாந்தியையும், நாகுவையும் தேடி வந்தனர். முதலில் சாந்தி போலீசாரிடம்பிடிபட்டாள். ஆனால் கொலை நடந்த தினத்தன்று வேறு ஒருவருடன் சென்று விட்டதாகவும், நாகு மட்டும் தான்அனந்த லட்சுமியுடன் தங்கி இருந்தததாக கூறினார்.
நாகுவை போலீசாரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே அனந்த லட்சுமியின் பிரேத பரிசோதனைஅறிக்கையில் மூலம் அவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும், அவர் மதுகுடித்திருந்தததும் தெரிய வந்தது.
அனந்த லட்சுமியின் வீட்டிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை, ரூ.20 ஆயிரம் பணம் திருட்டுபோயுள்ளதாக அவரது மகள் ஜோதி போலீசில் புகார் கொடுத்தார்.
கொலை நடந்த தினத்தன்று அனந்த லட்சுமியும், நாகுவும் ஒன்றாக மது அருந்தியிருக்கலாம் என்றும், குடிபோதையில் தன்னிடம் உள்ள நகை,பணம் பற்றி அனந்த லட்சுமி கூறியிருக்கலாம் எனவும், நகையையும்,பணத்தையும் கொள்ளையடித்து செல்ல நாகு முயன்ற போது அவரை அனந்தலட்சுமி தடுத்ததால் அவர் தாக்கிகொல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
போலீசார் நாகுவை தேடி ராஜமுந்திரி சென்றனர். அங்கு நாகுவை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் அனந்தலட்சுமியை கொன்றது நாகு தான் என்ற உண்மை வெளிவந்தது.
நாகுவை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications