புதுவை: மெஜாரிட்டியை நிரூபிக்க ரங்கசாமிக்கு ஒரு மாதம் கெடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரங்கசாமியின் தலைமையில் புதிய ஆட்சிஅமைப்பதற்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தது. மேலும் ஒரு மாத காலத்திற்குள் சட்டசபையில் மெஜாரிட்டிபலத்தை நிருபிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் தனது தலைமையில் புதுவையில் ஆட்சி அமைக்க ஜனாதிபதியின் ஒப்புதலைக் கேட்டிருந்தார். இதற்கானஒப்புதல் கோரும் கடிதத்தை அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பாண்டிச்சேரி துணை நிலைய ஆளுநர் ரஜனிராயிடம் கொடுத்தார்.
அந்தக் கடிதம் இன்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் முன்பு வந்தது. அவர் புதுவையில் ரங்கசாமி தலைமையில்புதிய ஆட்சி அமைப்பதற்கு அங்கீகாரம் அளித்துவிட்டார். மேலும் ஒரு மாதகாலத்திற்குள் ரங்கசாமி சட்டசபையில்மெஜாரிட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக புதுவை முன்னாள் முதல்வர் சண்முகம் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார்.சண்முகத்தின் ராஜினாமாவையும், ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை இடைக்காலமுதல்வராகப் பணியாற்றும்படி சண்முகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ரங்கசாமி நேற்று இரவு டெல்லிக்குச் சென்று அகில இந்திய காங்கிரஸ்தலைவி சோனியா காந்தியைச் சந்தித்து பாண்டிச்சேரியில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவை குறித்துஆலோசனை நடத்திவருகிறார்.
புதிய அமைச்சரவையில் பங்கேற்கவிருக்கும் அமைச்சர்கள் குறித்து இன்றும் முடிவு செய்யயப்படவில்லை என்றுரங்கசாமி கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications