நாகர்கோவிலில் தப்பிய கைதி சென்னையில் கைது
நாகர்கோவில்:
10 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளியாகி தப்பி ஒடிய ரவுடியை சென்னையில் கைதுசெய்தனர் போலீசார்.
நாகர்கோவிலில் சண்முகம் மற்றும் அவரது நண்பர் ஆகிய இரண்டு பேரை கொன்றது தொடர்பாக நாகேந்திரன்என்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 10 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர்4ஆண்டு காலத்தை சிறையில் கழித்தார்.
தினமும் காலையில் நாகர்கோவில் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் அவர் சில தினங்களுக்கு முன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சில தினங்கள் மட்டுமே நல்ல பிள்ளையாக காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்த நாகேந்திரன், இருதினங்களுக்கு முன் திடீரென தலைமறைவாகி விட்டார். இவர் தன் நண்பனுடன் தப்பி தலைமறைவானார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வியாசர்பாடி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அந்த வழியாக வரும் வாகனம் அனைத்தையும் அவர்கள் சோதனை செய்து வந்தனர்.
அப்போது நாகேந்திரனும், அவரது நண்பரும் அந்த பகுதி வழியாக காரில் வந்தனர். அவர்கள் வந்த காரைசோதனைக்காக போலீசார் நிறுத்த முயன்ற போது அந்த கார் நிற்கவில்லை. வேகமாக சென்றுவிட்டது.
போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போதும் கார் நிற்கவில்லை. இதையடுத்து காரைநிறுத்துவதற்காக காரின் டயரை நோக்கி சுட்டனர் போலீசார். துப்பாக்கி குண்டு துளைத்து காரின் டயர் வெடித்துகார் நின்றுவிட்டது.
இதையடுத்து, காரில் வந்த நாகேந்திரனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும்நாகர்கோவில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications