சேலம் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

உள்ளாட்சி தேர்தலின் ஏற்பட்ட மோதல் காரணமாக கொல்லப்பட் அதிமுக பிரமுகர் தங்கவேலின் உடலுக்கு தமிழகஅமைச்சர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செய்தனர்.

சேலம் அருகேயுள்ளது பாரப்பட்டி மேச்சேரியாம்பாளையம். இங்கு வசித்து வந்தவர் தங்கவேல் (40). இவர்விவசாயி. இவர் அதிமுகவை சேர்ந்தவர்.

இவர் அதிமுக ஒன்றிய பிரதிநிதியாக இருந்துவந்தார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்மனோன்மணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வந்தார் தங்கவேலு. இதனால் இவருக்கும் மாற்று கட்சியினரைசேர்ந்தவர்களுக்கும் இடையே சச்சரவு இருந்து வந்தது.

சம்பவ தினத்தன்று இரவு தங்கவேலு, ராஜா என்ற செங்கோடன் (52), செங்கோடனின் மகன் செல்வம் (29)தொட்டாய் வளவு தாளம்பு பேருந்து நிறுத்தம் அருகே செங்கோடனின் மற்றொரு மகன் ஆறுமுகம் (18)ஆகியோருடன் வந்து கொண்டிருந்தார்.

அப்போது தங்கவேல் மீது கோபம் கொண்டிருந்த மாற்று கட்சியினர் 20 பேர் தங்கவேலுவுடனும், அவருடன்வந்தவர்களிடமும் தகராறு செய்தனர். தகராறு முற்றியதையடுத்து தங்கவேலுவும், அவருடன் வந்தவர்களும் கம்பு,அரிவாளால் தாக்கப்பட்டனர்.

இதில் தங்கவேலுவும், அவருடன் வந்தவர்களும் படுகாயம் அடைந்தனர். தங்கவேலு சிகிச்சைக்காக தனியார்மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

மற்றவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும்முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்குஆறுதல் கூறினார்.

தங்கவேலுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தமிழகஅமைச்சர்கள் செம்மலை, தனபால், டாக்டர் சரோஜா, முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி மற்றும் சேலம்மாவட்ட அதிமுக தலைவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று தங்கவேலுவின் உடலுக்கு மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் தங்கவேலுவின் உடல் பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரூக்கு எடுத்துச் செல்லப்பட்டது

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சேவா கவுண்டர், தம்பிபையன், பொன்னுவேல்,காசிபையன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+