ரகசிய விமான தளம் கட்டும் நார்த்தர்ன் அலையன்ஸ்
காபூல்:
நார்த்தர்ன் அலையன்சுக்கு உதவும் வகையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் மீது அமெரிக்க நேற்றிரவும்இன்றும் தொடர் தாக்குதல் நடத்தியது. இப்போதும் விமானத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுள்ளது.
இத் தாக்குதலைப் பயன்படுத்தி நார்ததர்ன் அலையன்ஸ் படையினர் தலைநகர் காபூலை நெருங்கிவிட்டனர்.
ஆனால், இப்போதைக்கு காபூல் மீது தாக்குதல் ஏதும் நடத்த வேண்டாம் என நார்த்தர்ன் அலையன்சிடம்அமெரிக்கா கூறியுள்ளது.
இதனால் காபூலை நெருங்கிவிட்டாலும் அந்தப் படையினர் அந் நகரைத் தாக்குவதைத் தவிர்த்து வருகின்றனர்.பாதுகாப்புக்காக மட்டுமே எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரகசிய விமான தளம் அமைப்பு:
இதற்கிடையே தலிபான்கள் மீது தரைவழித் தாக்குதல் நடத்த அமெரிக்க விமானங்கள் காபூல் அருகே இறங்கும்வகையில் ஒரு ரகசிய விமானத் தளத்தை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் அமைத்து வருகின்றனர். காபூலில்இருந்து 40 கி.மீ. தொலைவில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாஞ்ச்ஷேர் வேலியில் இந்த விமானத் தளம்கட்டப்பட்டு வருகிறது.
மஷார்-ஏ-ஷெரீபில் உள்ள விமானத் தளம் நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆனால், இந்தவிமானத் தளத்தை ஒட்டியுள்ள மலைகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்தத் தளத்தை நோக்கிதலிபான்கள் தினந்தோறும் குண்டுமழை பொழித்து வருகின்றனர். இதனால், விமானங்களை இங்கே இயக்கமுடியாத நிலைக்கு நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்போது கட்டப்பட்டு வரும் விமானத் தளம் அமெரிக்காவுக்கு மட்டுமின்றி நார்த்தர்ன் அலையன்சுக்கே மிகப்பெரிய உதவியாக அமையும்.
மேலும் உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தானில் இருந்து பாஞ்ச்ஷேர் வேலிக்கு வரும் இரு சாலைகளையும் சிலமாதங்களில் பனி மூடிவிடும். இதனால், அவசரமாக இந்த விமானத் தளத்தை நார்த்தர்ன் அலையன்ஸ் கட்டிவருகிறது.
தலிபான்கள் தாக்கலாம் என்பதால் இந்த இடம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
உணவில் விஷம்:
இந் நிலையில் அமெரிக்க ராணுவத்தின் சரக்கு விமானங்கள் ஆப்கானிஸ்தான் முழுவதும் உணவுப்பொட்டலங்களையும் போட்டு வருகின்றன. ஆனால், இந்தப் பொட்டலங்களில் தலிபான்கள் விஷத்தைக் கலக்கமுயற்சி செய்து வருவதாக பென்டகன் கூறியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்காவின் பெயரைக் கெடுக்க முயற்சி நடப்பதாக பென்டகன் கருதுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications