இன்று பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகர மேயராக மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பொறுப்பேற்கவுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் சென்னை நகரின் மேயராக மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வெள்ளை மாளிகை என சென்னைவாசிகளால் அன்புடன் அழைக்கப்படும் ரிப்பன் கட்டடத்தில் காலை 10 மணிக்குநடக்கும் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு, மெட்ரோபாலிடன் முதன்மை செஷன்ஸ் நீதிபதி அசோக் குமார் பதவிப்பிரமாணம்செய்து வைக்கிறார். அதன் பிறகு புதிய கவுன்சிலர்களுக்கு ஸ்டாலின் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
ஸ்டாலின் குறித்த சில பின்னணியை இங்கே பார்ப்போம் ..
- மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மேயர் ஸ்டாலின்தான்.
- தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு மேயர் பதவியில் அமரும் முதலாவது மேயரும் ஸ்டாலின்தான்.
- இதுவரை சென்னை நகரில் மேயர்களாக இருந்தவர்கள் யாரும் செய்யாத அளவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தனதுகடந்த ஐந்து ஆண்டு பதவிக்காலத்தின்போது ஸ்டாலின் செய்து சென்னை மேயர் பதவிக்கு புதிய பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
- சென்னை நகரத் தூய்மைக்காக வெளிநாட்டு நிறுவனமான ஓனிக்ஸ் நிறுவனத்தை பணியில் அமர்த்தி இன்று அது சென்னை மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. ஓனிக்ஸ் நிறுவன சுத்திகரிப்பாளரை தெருவில் பார்க்காவிட்டால் மக்கள் கவலைப்படும் அளவுக்கு அந்த நிறுவனம் சென்னை மக்களிடம் இரண்டறக் கலந்து விட்டது.
- திட்டம் துவங்கியபோது கடும் விமர்சனத்திற்குள்ளானபோதும் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி குறைந்து மிகவும் உபயோகரமாக இருக்கும் சிறு பாலங்கள் ஸ்டாலினின் கருத்தில் உருவானவை. சென்னையின் அடையாள மையங்களாக இந்த பாலங்கள் இன்று உருவாகி விட்டன. சென்னையைப் போலவே, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சி மேயர்களும், நகராட்சித் தலைவர்களும்,பேரூராட்சித் தலைவர்களும் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொள்கிறார்கள்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications