டிவி நடிகையைக் கொன்றது ஏன்? கொலைகாரி பரபரப்பு வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் டிவி நடிகை அனைந்தலட்சுமியை கொன்றதாக கைது செய்யப்பட்ட நாகுஎன்ற பெண் போலீசில் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நான் அழகில்லாதவள் என்று அ-வர் திட்-டி-ய-தால் கோபம் கொண்டு அவரை கொலை செய்தேன்என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 20ம் தேதியன்று சென்னிையில் டிவி நடிகை அனந்தலட்சுமி என்றவர்கொல்லப்பட்டார். அவர் ஆந்திராவிலிருந்து பெண்களை அழைத்து விபசாரம் செய்பவர்என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அவருக்கு பெண்களை சப்ளை செய்து வந்தவர் ஆந்திரா ராஜமுந்திரியை சேர்ந்த லட்சுமிஎன்றும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்மேல் முதலில் போலீசார் சந்தேகப்பட்டனர்.

இந்நிலையில் போலீசாரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட லட்சுமி தனக்கும்,அனந்தலட்சுமியின் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், சம்பவ தினத்தன்றுசாந்தி, நாகு என்ற இரண்டு பெண்களை அனந்தலட்சுமியின் வீட்டுக்கு அனுப்பிவைத்ததாகவும் கூறினார்.

இதையடுத்து சாந்தி, நாகு ஆகிய இரண்டு பேரையும் போலீசார் தேடி வந்தனர். முதலில்போலீசாரிடம் பிடிபட்டவர் சாந்தி.ஆனால் அவர் சம்பவ தினத்தன்று இரவு தான் வேறுஒருவருடன் சென்று விட்டதாகவும், நாகு தான் அனந்தலட்சுமியிடம் இருந்ததாக கூறினார்.

இந்நிலையில் அனந்தலட்சுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அவர் இரும்புகம்பி மூலம் தாக்கப்பட்டதால் இறந்திருக்கிறார் என்றும் இறக்கும் முன் அவர் மதுஅருந்தியிருக்கிறார் என்றும் தெரியவந்தது.

அனந்தலட்சுமியின் வீட்டிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைகளும், ரூ.20,000பணமும் திருடப்பட்டிருந்தாக அவரது மகள் போலீசில் புகார்செய்தார்.

சம்பவ தினத்தன்று இரவு இளம்பெண் ஒருவர் சூட்கேசுடன் அனந்தலட்சுமியின்வீட்டிலிருந்து வெளியேறினார் என்று அந்த கட்டடத்தின் வாட்ச்மேன் கூறினார்.

இதையடுத்து அனந்தலட்சுமியை கொலை செய்தது நாகுதான் அவர்தான் நகைகளையும்,பணத்தையும் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர்.

இந்த கொலை வழக்கை துப்புதுலக்கி வந்த துணை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுதலைமையிலான போலீஸ் படையினர் நாகுவை தேடி ராஜமுந்திரி சென்றனர். அங்குநாகுவை கைது செய்து விசாரணைக்காக சென்னை கொண்டு வந்தனர்.

நாகு விசாரணையின் போது கூறியதாவது:

நான் கஸ்டமர் யாரையும் அழைத்து வராததால் என்னை அழகில்லாதவள், குரங்கு மாதிரிஇருக்கிறாய் என்று திட்டினார் அனந்தலட்சுமி. கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்ஆந்திராவிலிருந்து சென்னை வந்தேன். அன்று இரவு மது அருந்தும் போதும் மீண்டும்என்னை அழகில்லாதவள் என்று திட்டினார். இதனால் எனக்கு கடும் கோபம் வந்தது.

மது அருந்தி மயங்கி கிடந்த அனந்தலட்சுமயின் கண்களில் மிளகாய்பொடியை தூவினேன்.எரிச்சல் தாங்காமல் அவர் அலற தொடங்கியதும் அவரது வாயில் துணியை வைத்துஅடைத்தேன்.

அதன் பின் அவர் தலையில் இரும்ப தடியால் அடித்து கொன்றுவிட்டு, அங்கிருந்துநகைகளையும், பணத்தையும் திருடிக் கொண்டு ராஜமுந்திரி சென்று விட்டேன் என்றுகூறினார்.

போலீசார் நாகுவிடமிருந்து நகைகளையும், பணத்தையும பறிமுதல் செய்தனர். பின்னர்அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+