நல்லவர்களை கவிழ்க்க நினைக்கும் சதிகாரக் கும்பல்- பன்னீர் பாய்ச்சல்
சிவகங்கை:
மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களையும், நல்லாட்சி நடத்தும் நல்வர்களையும் கவிழ்ப்பதற்கு எப்போதும்ஒரு சதிகாரக் கும்பல் காத்திருக்கிறது என்று சிவகங்கையில் நடைபெற்ற மருதுபாண்டியர் விழாவில் முதல்வர்பன்னீர் செல்வம் பேசினார்.
சிவகங்கைச் சீமையை ஆண்டு, வெள்ளையர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய மன்னர்கள் மருது சகோதரர்கள்,வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். நேற்று (புதன்கிழமை) 24ம் தேதியுடன் அவர்கள்தூக்கிலிடபட்டு 200 ஆண்டுகள் முடிவடைகிறது.
அதற்கான விழா அரசு சாரபில் சிவகங்கையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் பன்னீர் செல்வம், தமிழகசட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்து, அமைச்சர்கள் துரைராஜ், நயினார் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள்,எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பேசியதாவது,
வீரமங்கை வேலுநாச்சியாரின் ஒப்பற்ற தளபதிகளாக இருந்து, பின் சிவகங்கை சீமையை ஆட்சி செய்தமருதுபாண்டிய மன்னர்கள் பற்றி அனைவருக்கும் தெரியும்.
ஆட்சித்திறம், அறிவாற்றல் மற்றும் தமிழ்ப்பற்றால் மக்களைக் கவர்ந்து, மக்களின் நன்மதிப்பைப் பெற்று சிறப்பானமுறையில் ஆட்சி செய்தார்கள்.
இதற்கு அப்போதைய வெள்ளையர்களின் அரசு எதிர்ப்புத் தெரிவித்து, மருதுபாண்டியர்களை ஆட்சியிலிருந்துஇறக்க சதிவேலை செய்தது.
இதுபோன்ற சதிகாரக் கூட்டம் இப்போதும் தமிழகத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று , மக்களின் நம்பிக்கையைப் பெற்று, நல்லாட்சி நடத்திவந்தநல்லவர்களைக் கீழிறக்க ஒரு கூட்டம் சதிவேலை செய்து வருகிறது.
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், முடிவில் தர்மமே வெல்லும் என்பார்கள். அதை மீண்டும் ஒருமுறைநிரூபிக்கும் வகையில், தமிழகத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் விரைவில் பொற்கால ஆட்சிதொடரும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications