அபு சலீம் ஷார்ஜாவில் கைது: மும்பை போலீஸ் விரைவு
ஷார்ஜா:
தாவூத் இப்ராகிமின் முன்னாள் கூட்டாளியான அபு சலீம் நேற்று (புதன்கிழமை) ஷார்ஜாவில் கைதுசெய்யப்பட்டான். இதையடுத்து மும்பை போலீசார் ஷார்ஜா விரைகின்றனர்.
மும்பை குண்டு வெடிப்பு, இசையமைப்பாளர் குல்ஷன் குமார் படுகொலை, கடத்தல், பணம் பறித்தல், கொலைகளில்தொடர்புடையவன் அபு சலீம். மொத்தம் இவன் மீது 35 கொலை வழக்குகள் உள்ளன.
தாவூத் இப்ராகிமுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவன், 1998ம் ஆண்டு முதல் தனியாக செயல்பட்டுவருகிறான். நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறான்.
இவனது முன்னாள் தலைவனான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளான். அபு சலீம் தனதுதலைமையகத்தை நைரோபியில் வைத்திருந்தாலும் ஐக்கிய அரபு நாடுகளில் (யு.ஏ.ஈ.) சுற்றி வந்தான்.இருவரையுமே கைது செய்யுமாறு பாகிஸ்தானிடமும் ஐக்கிய அரபு நாடுகளிடமும் பலமுறை இந்தியா கேட்டுக்கொண்டது.
ஆனால், இதை இந்த நாடுகள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக உலகம்தழுவிய அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இனடர்போலின் உத்தரவின்பேரில் யு.எ.ஈ. போலீசார்அபு சலீமை கைது செய்துள்ளனர்.
இத் தகவலை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் சகன் புஜ்பால் உறுதி செய்தார். ஆனால், டெல்லியில் அதிகாரிகள்இதை உறுதி செய்யவில்லை. கடந்த புதன்கிழமை யு.எ.ஈ. அரசிடமிருந்து மும்பை மாநில போலீசாருக்கு ஒருகோரிக்கை வந்தது. அபு சலீமின் கைரேகைகள் வேண்டும் என யு.எ.ஈ. போலீசார் கோரியிருந்தனர். ஆனால், வேறுதகவல் எதையும் தரவில்லை.
இதையடுத்து அபு சலீம் அங்கு கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என மும்பை போலீசார் கருதுகின்றனர்.பிடிபட்டவன் அபு சலீம் தானா என்பதை உறுதி செய்யவே கைரேகையை யு.எ.ஈ. கோருவதாக போலீசார்கருதுகின்றனர்.
அபு சலீமை எப்படியாவது இந்தியாவுக்குக் கொண்டு வரவும் மும்பை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காகஇன்டர்போலை தொடர்பு கொண்டுள்ளனர். அது அவ்வளவு எளிதில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் இவனது குரு தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசே பாதுகாப்பு அளித்து வருகிறது. அவன்பாகிஸ்தானின் முக்கிய வங்கிக்கே கடன் கொடுத்து உதவியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மும்பை போலீஸ் விரைவு:
அபுசலீம் கைது செய்யப்பட்டதையடுத்து மும்பை போலீசார் அவனது கைரேகையுடன் யு.எ.ஈக்கு விரைகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications