ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட ரூ. 1 கோடி எரிசாராயம்
சென்னை:
மைசூரிலிருந்து கேரள மாநிலத்திற்கு ஆம்னி பஸ்ஸில் கடத்திச் செல்லப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள எரிசாராயத்தை சேலம்போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சேலம் போலீஸார் வழக்கம் போல சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு ஆம்னி பஸ்சை நிறுத்திச் சோதனை செய்தனர்.அந்த பஸ் மைசூரிலிருந்து திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்தது.
பஸ்சை சோதனை செய்து பார்த்தபோது அதில் பயணிகளின் பெட்டிகள் வைக்கும் இடத்தில் பெட்டிகளுக்குப் பதில் 220 கேன்கள்இருந்தன.
அந்த கேன்களில் எரிசாராயம் வைக்கப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். இந்த எரிசாராயத்தை கேரளாவில்வினியோகிகக் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பஸ் டிரைவரை போலீஸார் விசாரித்தனர்.
அப்போது, பஸ்சின் டிரைவர் தான் பஸ்சின் உரிமையாளர் என்பதும் அவர் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர் கேரள மாநில ஆயுதப்படை போலீஸில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருவதும் விசாரணையின் போதுதெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications