மேயர் பதவி சுகமானதல்ல... ஸ்டாலின் பேச்சு
சென்னை:
நான் கடந்த முறை மேயராக இருந்தபோது துவக்கப்பட்டு, பின்னர் வந்த அரசால் கிடப்பில் போடப்பட்ட பல திட்டங்களைநிறைவேற்றுவதே முதல் லட்சியம் என்று சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேயராக மீண்டும் பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் கடந்த முறை மேயராக இருந்தபோது, மக்கள் நலத்திட்டங்கள் பல துவக்கப்பட்டன. இவையெல்லாம் பின்னர் ஆட்சிமாறியபோது நிறைவேற்றப்பட முடியாமல் போய் விட்டன.
நான் செய்த பணிகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி. மேயர் பதவி சுகமானதல்ல. மக்கள் பணி செய்யவே இதற்குத்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
மாநகராட்சிக் கூட்டங்களில் எதிர்க்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் இவை முடங்கிக்கிடக்கின்றன.
இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதே இப்போது என் முன் உள்ள முக்கியப் பணியாகும். மக்களுக்குப் பலனளிக்கக் கூடிய இந்தப்பணிகளை நிறைவேற்ற எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்புத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
மாநகராட்சியில் திமுக உறுப்பினர்கள் பெருமளவில் இல்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை. மக்கள்பிரச்சினைகளைத்தான் இங்கு பேசப் போகிறோம். அரசியல்ரீதியான அணுகுமுறை எதுவும் இங்கே இருக்காது.
எனவே மக்கள் நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அதிமுகவினரும், பிற எதிர்க்கட்சியினரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்றுநம்புகிறேன் என்றார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications