சிமி, எல்.டி.டி.ஈ. தீவிரவாத இயக்கங்களாக அறிவிப்பு
டெல்லி:
இந்தியாவின் புதிய தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமி, லஸ்கர்-ஏ-தொய்பா, உல்பா, விடுதலைப் புலிகள்உள்ளிட்ட பல இயக்கங்கள் தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இயக்கங்களுடன் தொடர்புவைத்துக்கொள்வது சட்டவிரோதமான செயல் என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தீவிரவாத இயக்கங்களை ஒழிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்தொடர்ச்சியாகத் தற்போது தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் கெண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்துவரவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் தீவிரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் விவரம்:
காஷ்மீர் தீவிரவாத இயக்கங்கள்:
லஸ்கர்-ஏ-தொய்பா, பாஸ்பேன்-ஏ-அல்ஹே ஹதிஸ், ஜெய்ஸ்-ஏ-மொகம்மத், தாரிக்-ஏ-பக்ரான்,ஹர்கத்-உல்-முஜாஹிதீன், ஹர்கத்-உல்-அன்சார், ஹிஸ்ப்-உல்-முஜாஹிதீன், அல்-உமர்-முஜாஹிதீன் மற்றும்ஜம்மு-காஷ்மீர் இஸ்லமிய முன்னணி.
வட-கிழக்கு மாநில இயக்கங்கள்:
அஸ்ஸாமில் செயல்பட்டுவரும் உல்பா, போடோ, மக்கள் விடுதலைப் படை, ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி,காங்லிபாக் மக்கள் புரட்சிக் கட்சி, காங்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்லி யால் கான்பலூப், மணிப்பூர் மக்கள்விடுதலை முன்னணி, அனைத்து திரிபுரா புலிகள் படை மற்றும் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி.
பஞ்சாப்:
மேலும் தற்போது செயல்படாமல் இருக்கும் பப்பர் கல்சா இண்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை,காலிஸ்தான் ஜிந்தாபாத் படை.
புலிகள்:
இவை தவிர இலங்கையில் செயல்பட்டு வரும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் தீவிரவாத இயக்கமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து இயக்கங்களுடனும் பொதுமக்கள் யாரும் தொர்பு வைத்துக் கொள்ளக்கூடாத என்றும், அவ்வாறுசெய்தால் அது தேசவிரோதச் செயலாகக் கருதப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications