நார்த்தர்ன் அலையன்சின் முக்கிய கமாண்டர் தலிபான்களிடம் சிக்கிப் பலி
காபூல்:
ஆப்கானிஸ்தானில் அடுத்த ஆட்சியை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் எனக் கருதப்பட்ட நார்த்தர்ன்அலையன்ஸ் படையின் கமாண்டர் அப்துல் ஹக் தலிபான் படையினரால் தூக்கில் போடப்பட்டார்.
ஆபதகானிஸ்தானின் முன்னாள் மன்னர் ஷகீர் ஷாவைத் தான் அடுத்து ஆட்சியில் அமர வைக்க அமெரிக்காதிட்டமிட்டுள்ளது. ஷாவின் நெருங்கிய நண்பர் அப்துல் ஹக். இவரது உதவியுடன் நார்த்தர்ன் அலையன்ஸ்படையினரையும் அடுத்த ஆட்சியில் பங்கேற்க வைக்க ஷாவும் அமெரிக்காவும் திட்டமிட்டிருந்தன.
இந் நிலையில் ஹக் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் தலிபான் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழைந்தார். தனதுபடையினருக்கு ஆதிவாசிகளின ஆதரவைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். அவரை இந்த முயற்சியில்ஈடுபட வைத்ததே அமெரிக்கா தான் என்று கூறப்படுகிறது.
அவர் ஆதிவாசிப் பகுதியில் இருப்பதைத் தெரிந்து கொண்ட தலிபான்கள் ரகசியமாக அவரை சுற்றி வளைத்தனர்.
அவர் தலிபான்களிடம சிக்கிக் கொண்டதை அறிந்த அமெரிக்கப் படையினர் விமானங்களை அனுப்பி அங்குதலிபான்கள் மீது குண்டுவீச்சு நடத்தினர். ஆனால், இந்த குண்டுவீச்சையும் மீறி அப்துல் ஹக்கை தலிபான்கள் சிறைபிடித்தனர்.
பின்னர் அவரை துப்பாக்கிகளால் சரமாறியாக சுட்டுத் துளைத்தெடுத்தனர்.
43 வயதான ஹக்கைக் கொன்றதன் மூலம் நார்த்தர்ன் அலையன் மிக முக்கியத் தலைவரை இழந்துள்ளது. கடந்தமாதம் தான் இந்தப் படையின் தலைவர் அகமத் ஷா மசூதை பின்லேடனின் ஆட்கள் கொன்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications