அமெரிக்காவுக்கு இராக்கிலிருந்து வந்ததா ஆந்த்ராக்ஸ்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

இராக்கிலிருந்து தான் ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று புதியசந்தேகம் எழுந்துள்ளது.

செனட்டர் டாம் டஸ்செலிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இருந்த ஆந்த்ராக்ஸ் பாக்டீரியாக்களைச் சோதித்தபோதுஅதில் இருந்த ரசாயனப் பொருள்கள் இராக் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தக் கடிதத்திலும் வேறு சில கடிதங்களிலும் இருந்த பாக்டீரியாக்களுடன் பென்டோனைட் என்ற ரசாயனப்பொருள் இருந்தது. பாக்டீரியாக்கள் தனித்தனியே காற்றில் கலந்து பறக்க உதவும் ரசாயனம் இது.

இராக்கின் உயிரியல் ஆயுதங்களில் மிக முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் இந்த பென்டோனைட் என்றுபென்டகன் கருதுகிறது. இதை வேறு நாடுகளும் கூட பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், இதை இராக் அதிகம்பயன்படுத்துவதால் அந் நாட்டின் மீது சந்தேகம் வலுத்து வருகிறது.

இந்த பென்டோனைட் மண்ணில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+