அம்பேத்கர் சிலை சேதம்-3 லாரிகளுக்குத் தீவைப்பு
சென்னை:
சென்னை அருகே நெரும்பூர் என்ற இடத்தில் லாரி மோதி அம்பேத்கர் சிலை சேதமடைந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 3 மணல்லாரிகளுக்குத் தீவைத்துக் கொளுத்தினர்.
மாமண்டூர் பகுதியில் உள்ள ஆற்றில் தினசரி 100க்கணக்கனா லாரிகள் மணல் ஏற்றிக் கொண்டு செல்வது வழக்கம். இந்த லாரிகள்நெரும்பூர் வழியாக செல்லும் போது அதிவேகமாக செல்வதால் அப்பகுதியில் அடிக்கடி பலர் லாரியில் அடிபட்டு இறப்பது வழக்கம்.இதனால் அப்பகுதி வழியாக மணல் லாரிகள் வரக் கூடாது என்று அப்பகுதி மக்கள் தடை விதித்தனர்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஒரு மணல் லாரி அப்பக்கமாக வந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் சாலையை மறித்து லாரியைதடுக்க முயன்றனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தப்புவதற்காக மணல் லாரியை டிரைவர் பின்பக்கமாக வேகமாக திருப்பியுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த அம்பேத்கர் சிலை மீது லாரி மோதியது. இதில் சிலை சேதமடைந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். லாரியை வளைத்தப் பிடித்தனர். அவர்களிடமிருந்து டிரைவர் எப்படியோத் தப்பிவிட்டார். இருந்தும் ஆத்திரம் தீராத பொதுமக்கள் லாரிக்குத் தீவைத்தனர். அந்தப் பக்கமாக வந்த மேலும் 2 லாரிகளையும் தடுத்து நிறுத்திதீவைத்துக் கொளுத்தினர்.
இந்த சம்பவம் அறிந்ததும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் விரைந்துவந்தனர். பொதுமக்களைச் சமாதானப்படுத்தி கலவரத்தைத் தடுத்தனர்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications