திருச்சியில் தியேட்டர் அதிபர் கொலை
திருச்சி:
திருச்சி அருகே டால்மியபாபுரம் பகுதியில் தியேட்டரில் சிகரெட் குடித்ததை தட்டிக் கேட்ட தியேட்டர் அதிபர்படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
டால்மியாபுரம் அருகே உள்ள புள்ளம்பாடியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மணிமேகலையின் தம்பி சிற்றம்பலம்என்பவருக்குச் சொந்தமான சினிமா தியேட்டர் உள்ளது.
இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற வாலிபர் படம் பார்க்கவந்துள்ளார். சென்ட்ரிங் வேலை செய்யும் இவர் படம் பார்த்துக் கொண்டிரந்த போது சிகரெட் குடித்துள்ளார்.
இதைப் பார்த்த தியேட்டர் அதிபர் சிற்றம்பலம், ரவிக்குமாரை அழைத்துக் கண்டித்ததுடன், தியேட்டரைவிட்டுவெளியே அனுப்பியுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ரவி, உன்னைத் தீர்த்துக்கட்டாமல் விடமாட்டேன் என்று கோபமாகச்சொல்விட்டுச் சென்றிருக்கிறார்.
பிறகு ரவி சென்னை சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கு அங்குள்ளகூலிப்படையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில்வாக்களிக்க தனது கூலிப்படை நண்பர்களுடன் திருச்சி வந்துள்ளார்.
கடந்த கடந்த வியாழக்கிழமை ரவிக்குமார் தனது நண்பர்களுடன் புள்ளம்பாடி பஸ் நிலையம் அருகேநடந்துசென்றார். அப்போது அங்கு வந்த சிற்றம்பலத்தைப் பார்த்தவுடன் விரட்ட ஆரம்பித்தனர்.
அப்போது ஒருவன் சிற்றம்பலத்தின் காலில் வெட்டியதால் அவரால் மேலும் ஓடமுடியாமல் விழுந்துவிட்டார். பிறகுஅனைவரும் சேர்ந்து சிற்றம்பலத்தை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தப்பிஓடிவிட்டனர்
இந்தச் சம்பவம் பற்றித் தகவல் அறிந்ததும் லால்குடி போலீசார் விரைந்து வந்து சிற்றம்பலத்தை உடலை எடுத்துபிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு ரவிக்குமார் மற்றும் அவரதுகூட்டாளிகள் மீது வழக்குப் பதிவுசெய்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications