சென்னையில் தாயின் பிணத்துடன் பூட்டிய வீட்டுக்குள் 2 நாள் இருந்த 2 பிஞ்சு குழந்தைகள்
சென்னை:
தாய் கொலை செய்யப்பட்டது கூட தெரியாத 2 பிஞ்சு குழந்தைகள், இறந்து போன தாயின் உடலுடன் பூட்டியவீட்டுக்குள் இருந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்தவர் சூசைராஜ் (வயது 28). இவருடைய மனைவி கலா (26). இந்ததம்பதிக்கு 2 வயதில் விக்னேஷ் என்ற ஆண் குழந்தையும், இன்னமும் பால்குடி மாறாத 1 வயதில் இந்திரா என்றபெண் குழந்தையும் உள்ளன.
சூசைராஜ் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஆனால் வேலைக்கு சரியாக செல்வது கிடையாது. அப்படி சென்றுசம்பாதித்தாலும் அந்த பணத்தை வீட்டில் கொடுக்காது குடியிலேயே செலவழித்து விடுவார்.
இவர் குடித்து பணத்தை செலவு செய்து குடும்பத்தை கவனிக்காது இருப்பதை இவரது மனைவிக்கு கண்டித்தால்அவருக்கு பதிலாக கிடைப்பது அடியும் உதையும்தான்.
சம்பவ தினமான வியாழக்கிழமையும் சூசைராஜுக்கும், அவரது மனைவிக்கும் சண்டை வந்தது.
வெள்ளிக்கிழமை முழுவதும் சூசைராஜின் வீடு திறக்கவில்லை. நேற்று (சனிக்கிழமை) சூசைராஜின் வீட்டிலிருந்துஅழுகுரல் கேட்கவும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்து பார்த்தபோது சூசைராஜின் வீடு வெளிப்பக்கம்பூட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ந்து போனார்கள்.
வீட்டை திறந்து உள்ளே சென்று அழுதுகொண்டிருந்த விக்னேஷை சமாதானப்படுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றஅவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்று விட்டார்கள்.
வீட்டிற்குள் கலா கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். அவரது கழுத்து கயிறால் இறுக்கப்பட்டிருந்தது. இந்திராதாயிடம் பால் குடித்த நிலையில் மயங்கி கிடந்தது. சிறுவன் விக்னேஷுக்கு தாய் இறந்ததே தெரியவில்லை.
இது குறித்து உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் சைலேந்திரபாபுதலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்டனர்.
இரண்டு நாள் பட்டினியில் வாடிய குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டது.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சண்டையின் போது சூசைராஜ் கோபம் கொண்டு கலாவை கொன்று விட்டுவீட்டின் வெளியே தாழ்பாள் போட்டுவிட்டு தப்பி ஓடியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குழந்தைகள் இரண்டுபேரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடியசூசைராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications